- துத்தநாகத்தால் வீரணப்பிரமேகம்,
- அதிசாரம்,
- வெள்ளை,
- உட் சூடு,
- சீத ரத்த கழிச்சல்,
- முளை விரணம்,
- பித்தம் முதலியவை நீங்கும் .
- வெள்ளீயத்தால் இராசய தாகரோகம்,
- கடுவன்,
- சலப் பிரமேகம்,
- பித்த கப தொந்தம்,
- மேக மூத்திரம்,
- தேஜசு குன்றல்,
- சுரம்,
- துர்பலம்,
- விரணம்,
- மந்தார சுவாசம்,
- கபம் சேர்ந்த மந்தாகினி இவைகள் நீங்கும்.
- கருவங்கதால் தாவிர விஷம்,
- கண்நோய்,
- வலி வாத குன்மம்,
- பகந்தர விரணம்,
- கஜ சரும குட்டம்,
- சுரம்,
- பிரமேகம்,
- புற்றுநோய்,
- குழி விழும் ரணங்கள்,
- கரு மேகம்,
- செம் மேகம்,
- தடிப்பு முதலியன தீரும்.
- வெட்டையாகிய தரா என்னும் லோகத்தால் கீல் பிடிப்பு.
- வெள்ளை விழுதல்,
- கப வாத தொந்தம். ஆகியன தீரும்.
- வெண்கலத்தினால்,விழி ரோகம்,
- சோமரோகம்,
- வெகு மூத்திரம்,
- உதிர பித்தம்,
- இரைப்பு,
- அஜீரணம்,
- கப வாத பிரமேகம்,
- குத்தல்,
- பெரு வயிறு,முதலியவைகள் போகும்.
- சுக்கிலமும் ,
- பித்தமும் விருத்தியாகும்.
- பித்தளையால் சுக்கிலப் பெருக்கம்,
- குளிச்சியும் உண்டாகும்.
- தீச்சுரம்.
- வாதாதிக்கம்,
- பித்த குன்மம்.இவைகள் நீங்கும்.
- அயத்தினால் பாண்டு,
- வெள்ளை குட்டம்,
- அதி தூலரோகம்,
- வீக்கம்,
- சோபை,
- மந்தம்,
- காமாலை,
- குன்மம்,
- தாது நட்டம்,இவைகள் தீரும்.
- மல விருத்தியும்,தீபனமும் உண்டாக்கும்.
- தாம்பரத்தினால் ரத்த பித்தம்,
- சந்நியாசம்,
- வழுவை மகோதரம்,
- கபாதிக்கம்,
- பிலீகம்,
- அஜீரணம்,
- வெண்குட்டம்,
- பித்த கபம்,
- ரத்த குன்மம்,
- விரணம்,
- திரிதோஷ காசம்,
- கிருமி,
- தாது நட்டம்,
- விழி நோய்,முதலியவை நீங்கும்.
- வெள்ளியினால் உதிர பேதி,
- சயம்,
- பைத்தியம்,
- கோழை,
- விழி நோய்,
- இருமல்,
- மார்புச் சளி,
- அட்ட குன்மம்,
- வாத கோபம்,
- கிரந்தி,
- நீர்க்கோவை,
- லாஞ்சனம்,
- சிரங்கு,
- சொறி
- மா விஷம்,
- மேக வாத பிடிப்பு,
- வெள்ளை ஒழுக்கு முதலியன குணமாகும்.
- பொன்னால் தாவர விஷங்கள்,
- தேஜசு மழுங்கல்,
- அபினியாசா சந்நிபாதம்,
- பித்த சயம்,
- பித்த காசம்,
- தேக வெடிப்பு,
- முதிர்ந்த கல்தோஷம்,
- சுக்கில சீர்கேடு,
- விழி நோய்,
- கோழைக்கட்டு இவைகள் போகும்,
- காமத்தை விருத்திக்கும்.