புதன், 20 ஜூலை, 2016

10.நாகம்,(சிறு கண் நாகம்,சீறல்,துத்தநாகம்)


  • துத்தநாகத்தால் வீரணப்பிரமேகம்,
  • அதிசாரம்,
  • வெள்ளை,
  • உட் சூடு,
  • சீத ரத்த கழிச்சல்,
  • முளை விரணம்,
  • பித்தம் முதலியவை நீங்கும் .

9.வெள்ளீயம்,(வெண்ணாகம், தகரம்,வங்கம்,)




  • வெள்ளீயத்தால் இராசய  தாகரோகம்,
  • கடுவன்,
  • சலப் பிரமேகம்,
  • பித்த கப தொந்தம்,
  • மேக மூத்திரம்,
  • தேஜசு குன்றல்,
  • சுரம்,
  • துர்பலம்,
  • விரணம்,
  • மந்தார சுவாசம்,
  • கபம் சேர்ந்த மந்தாகினி இவைகள் நீங்கும். 

8.கருவங்கம்,(காரீயம்,கரு நாகம்,காரி,)





  • கருவங்கதால் தாவிர விஷம்,
  • கண்நோய்,
  • வலி வாத குன்மம்,
  • பகந்தர விரணம்,
  • கஜ சரும குட்டம்,
  • சுரம்,
  • பிரமேகம்,
  • புற்றுநோய்,
  • குழி விழும் ரணங்கள்,
  • கரு மேகம்,
  • செம் மேகம்,
  • தடிப்பு முதலியன தீரும்.

7.தரா (ஜஸதம்,சத்து,)

  • வெட்டையாகிய தரா என்னும் லோகத்தால் கீல் பிடிப்பு.
  • வெள்ளை விழுதல்,
  • கப வாத தொந்தம். ஆகியன தீரும்.

6.வெண்கலம் ,




  • வெண்கலத்தினால்,விழி ரோகம்,
  • சோமரோகம்,
  • வெகு மூத்திரம்,
  • உதிர பித்தம்,
  • இரைப்பு,
  • அஜீரணம்,
  • கப வாத பிரமேகம்,
  • குத்தல்,
  • பெரு வயிறு,முதலியவைகள் போகும்.
  • சுக்கிலமும் ,
  • பித்தமும் விருத்தியாகும்.

5.பித்தளை, (குடவன்),



  • பித்தளையால் சுக்கிலப் பெருக்கம்,
  • குளிச்சியும் உண்டாகும்.
  • தீச்சுரம்.
  • வாதாதிக்கம்,
  • பித்த குன்மம்.இவைகள் நீங்கும். 

4.அயம்.(இரும்பு,லோகம்,)


  • அயத்தினால் பாண்டு,
  • வெள்ளை குட்டம்,
  • அதி தூலரோகம்,
  • வீக்கம்,
  • சோபை,
  • மந்தம்,
  • காமாலை,
  • குன்மம்,
  • தாது நட்டம்,இவைகள் தீரும்.
  • மல விருத்தியும்,தீபனமும் உண்டாக்கும்.

3.செம்பு,(தாமிரம்,ரவி,ராசி,மிலேச்சம்,தாம்பரம்,நேபாளஜம்,)



  • தாம்பரத்தினால் ரத்த பித்தம்,
  • சந்நியாசம்,
  • வழுவை மகோதரம்,
  • கபாதிக்கம்,
  • பிலீகம்,
  • அஜீரணம்,
  • வெண்குட்டம்,
  • பித்த கபம்,
  • ரத்த குன்மம்,
  • விரணம்,
  • திரிதோஷ காசம்,
  • கிருமி,
  • தாது நட்டம்,
  • விழி நோய்,முதலியவை நீங்கும்.

2.வெள்ளி அல்லது ரஜிதம்.(மதி,துய்யான்,கனிஜம்,வேதஜம்,வங்கஜம்,)



  • வெள்ளியினால் உதிர பேதி,
  • சயம்,
  • பைத்தியம்,
  • கோழை,
  • விழி நோய்,
  • இருமல்,
  • மார்புச் சளி,
  • அட்ட குன்மம்,
  • வாத கோபம்,
  • கிரந்தி,
  • நீர்க்கோவை,
  • லாஞ்சனம்,
  • சிரங்கு,
  • சொறி 
  • மா விஷம்,
  • மேக வாத பிடிப்பு,
  • வெள்ளை ஒழுக்கு முதலியன குணமாகும்.

1.தங்கம்.(பரி,ஈகை,தாய்,சொர்ணம்,)



  • பொன்னால் தாவர விஷங்கள்,
  • தேஜசு  மழுங்கல்,
  • அபினியாசா சந்நிபாதம்,
  • பித்த சயம்,
  • பித்த காசம்,
  • தேக வெடிப்பு,
  • முதிர்ந்த கல்தோஷம்,
  • சுக்கில சீர்கேடு,
  • விழி நோய்,
  • கோழைக்கட்டு  இவைகள் போகும்,
  • காமத்தை விருத்திக்கும்.