- துத்தநாகத்தால் வீரணப்பிரமேகம்,
- அதிசாரம்,
- வெள்ளை,
- உட் சூடு,
- சீத ரத்த கழிச்சல்,
- முளை விரணம்,
- பித்தம் முதலியவை நீங்கும் .
- வெள்ளீயத்தால் இராசய தாகரோகம்,
- கடுவன்,
- சலப் பிரமேகம்,
- பித்த கப தொந்தம்,
- மேக மூத்திரம்,
- தேஜசு குன்றல்,
- சுரம்,
- துர்பலம்,
- விரணம்,
- மந்தார சுவாசம்,
- கபம் சேர்ந்த மந்தாகினி இவைகள் நீங்கும்.
- கருவங்கதால் தாவிர விஷம்,
- கண்நோய்,
- வலி வாத குன்மம்,
- பகந்தர விரணம்,
- கஜ சரும குட்டம்,
- சுரம்,
- பிரமேகம்,
- புற்றுநோய்,
- குழி விழும் ரணங்கள்,
- கரு மேகம்,
- செம் மேகம்,
- தடிப்பு முதலியன தீரும்.
- வெட்டையாகிய தரா என்னும் லோகத்தால் கீல் பிடிப்பு.
- வெள்ளை விழுதல்,
- கப வாத தொந்தம். ஆகியன தீரும்.
- வெண்கலத்தினால்,விழி ரோகம்,
- சோமரோகம்,
- வெகு மூத்திரம்,
- உதிர பித்தம்,
- இரைப்பு,
- அஜீரணம்,
- கப வாத பிரமேகம்,
- குத்தல்,
- பெரு வயிறு,முதலியவைகள் போகும்.
- சுக்கிலமும் ,
- பித்தமும் விருத்தியாகும்.
- பித்தளையால் சுக்கிலப் பெருக்கம்,
- குளிச்சியும் உண்டாகும்.
- தீச்சுரம்.
- வாதாதிக்கம்,
- பித்த குன்மம்.இவைகள் நீங்கும்.
- அயத்தினால் பாண்டு,
- வெள்ளை குட்டம்,
- அதி தூலரோகம்,
- வீக்கம்,
- சோபை,
- மந்தம்,
- காமாலை,
- குன்மம்,
- தாது நட்டம்,இவைகள் தீரும்.
- மல விருத்தியும்,தீபனமும் உண்டாக்கும்.